தமிழ்மொழியில் ஒற்றுப் பிழைகள்!

தமிழ்

தமிழ்

சொல்-அச்சு
தளத்தில் என்னுடைய முதல் வலைப்பூ இது.   தமிழுக்கும் அமுதென்று பேர்.  கல்தோன்றி மண் தோன்றா காலத்துக்கும் மூத்தமொழி எங்கள்மொழி என்றெல்லாம் சொல்வோம்.  ஆனால் பயன்படுத்துகையில் இலக்கணப் பிழைகளை தவிர்க்க பெரும்பாலோர் முயற்சிப்பதே இல்லை.  கரணீயங்கள்:

 1. தவறை உணராமல் சரியென்றே நிச்சயமாக எண்ணிக்கொண்டு பயன்படுத்துதல்.
 2. தவறு என்று அறியாமல் பிழையாகவே பயன்படுத்துதல்.
 3. தவறை இலக்கணப்படி தவறென்று அறிந்தாலும்,  இன்றைய காலகட்டத்துக்கு இதுவே சரி என்று பயன்படுத்துதல்.

இப்படி பலர் உண்டு.   ஆனால் ஆங்கிலத்தில் “a”, “an”, “the” பயன்பாட்டை மட்டில் மிகச் சரியாக பயன்படுத்த வேண்டும் என்று 100க்கு 99 விழுக்காடு ஆங்கிலம் அறிந்த தமிழன்பர்கள் எல்லோருமே சொல்வார்கள்.  நான் சொல்ல வருவது, ஆங்கிலத்தில் தவறு செய்ய வேண்டும் என்பதல்ல.  தமிழிலும் இலக்கணப் பிழையற எழுத  முயற்சிக்க வேண்டுமென்பதே!

தமிழில் “ஒரு”, “ஓர்” பயன்பாடு
———————————————
முதலில் ஒரு / ஓர் பற்றிய இலக்கண விதிக்குச் சான்றாக இருப்பது கீழிருக்கும் தொல்காப்பிய நூற்பா:-

முதலீர் எண்ணின்முன் உயிர்வருகாலைத்
தவலென மொழிப உகரக்கிளவி
முதனிலை நீடல் ஆவயினான  (தொல். எழுத்து 455)

இந்த நூற்பாவின் விளக்கம்:  அடுத்து உயிரெழுத்து வந்தால்ஒரு இரு என்ற முதலிரண்டுஎண்களின் இறுதியிலுள்ள உகரம் கெடும் என்பதும், முதலிலுள்ள குறில் நீண்டு நெடிலாகும் என்பதும், தெளிவு.  ஒரு இரு என்பவற்றின்முதலிலுள்ள குறில்கள், அடுத்து உயிர்வந்தால் நெடிலாகும் என்றால், அடுத்து மெய்வந்தால் இருந்தபடியே இருக்கும்.

அடுத்து நன்னூலின் நூற்பா:  (பொதுவானது) :

‘ஒன்றன் புள்ளி ரகரமாக இரண்டன் ஒற்றுயிர் ஏகஉவ் வருமே’ – இஃது பொதுவான தென்றாலும், இதன் உரையாசிரியர் இதற்கு விளக்கமாக, “’ரகரமெய் உகரம் பெறுவது வருமொழி முதலில் மெய்வரின் எனவும் உயிர் வரின் உகரம் பெறாது எனவும் கொள்க”  என்கிறார்.   (ஆனால் இதனை கட்டாயம் என்று நன்னூலும் கூறவில்லை!).  ஆகவே தொல்காப்பியமே தமிழிலக்கண முதல் என்பதால்,  அதனை பின்பற்றியே இந்த கட்டுரை!

தொல்காப்பிய நூற்பாவை பின்பற்றி, எப்போது “ஒரு”  என்ற சொல்லையும், “ஓர்” என்ற சொல்லையும் பயன்படுத்த வேண்டுமென்று இங்கே கூறப் போகிறேன்.   இது ஆங்கிலத்தில் “ a” , “an”   என்ற பயன்பாட்டுக்குக்கு நேர்.

ஒரு வருமொழிக்கு முன் (சொல்லுக்கு முன்) “ஓர்”  என்ற சொல்லைப் பெய்து பயன்படுத்த வேண்டுமெனில்,  அந்த வருமொழிச் சொல்  உயிரெழுத்தால் தொடங்குதல் வேண்டும். (எ-கா)

ஒர் அளவு, ஓர் ஆடை,  ஓர் இட்டலி, ஓர் ஈட்டி, ஓர் உலகம், ஓர் ஊஞ்சல், ஓர் எலி, ஓர் ஏணி, ஓர் ஐயம், ஓர் ஒட்டகம், ஓர் ஓடம், ஓர் ஔடதம்.

அதுபோல அந்த வருமொழி  ஏதேனும் உயிர்மெய் எழுத்தால் தொடங்கினால் “ஒரு” என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.  (எ-கா)

ஒரு மனம் (அவளுக்கென்றோர் மனம் – என்ற திரைப்படம் இசகுபிசகாக உங்களுக்கு இப்போது நினைவிற்கு வந்திருக்குமே(!))

இதில் விதிவிலக்கு பாவலர்க்கு மட்டுமே!  ஓசை நயங்கருதி  குறைந்த அளவில் மாறிப்  பயனான பாடலகள் நிறைய  உண்டு.

ஒற்றுப் பிழைகள் (அ)  சந்திப் பிழைகள்:

———————————————————

இதற்கு அடுத்து எல்லோர் காலையும் வாரிவிடுவது இலக்கணத்தில் ஒற்றுப்பிழை என்று சொல்லப்படும் சந்திப்பிழைகள்.  எங்கே “க்” போடவேண்டும், எங்கே போடக்கூடாது என்பதறியாமலேயே, பலரும் பட்டறிவால் ஓரளவுக்குச் சரியாகவே போட்டுவிடுகிறோம்.   எனினும் போடக்கூடாத இடத்தில் பெய்து பயன்படுத்துவதும், போட வேண்டிய இடத்தில் போடாமல் போவதும் நிறையபேர் இன்னமும் செய்கிறார்கள்.

அடுத்து வரும் பதிவுகளில் வரும் எடுத்துக்காட்டுகளின் படி  இரு சொற்கள் சேரும் போது, இரண்டாவது சொல்லின் முதலெழுத்து க், ச், த், ப், முதலிய நான்கு மெய்யெழுத்துகளில் உருவான உயிர் மெய்யெழுத்துக்களாக இருப்பின் (உம் – க, கா, ச, சா, த, தா, ப, பா முதலானவை) நடுவிலே க், ச், த், ப் ஆகிய வல்லின மெய்யெழுத்துக்கள் சில விதிகளின் படி, சில சொற்களில் மட்டும் நடுவில் சேரும். இதனையே வல்லெழுத்து மிகுதல் என்கிறோம். தேர்வுகளிலும், கட்டுரைகளிலும் மாணவர்கட்கு மதிப்பெண்கள் குறைவதற்கு முக்கிய காரணம் வல்லெழுத்து மிகும்/மிகா இடங்களை அறியாமையே.   சாதாரணமாக தெரிந்து கொள்ள வேண்டிய சில முக்கிய விதிகள் மட்டுமே இங்கு விளக்கப் பட்டிருக்கிறது. இவற்றை நினைவு கொண்டாலே பெரும்பாலான பிழைகளை நீக்கிவிடலாம்.  முதலில் ஒற்று மிகும் இடங்களைப்பற்றி கூறுகிறேன்.

இவண் அன்பன்

இராஜ.தியாகராஜன்

www.pudhucherry.com
http://www.tyagas.blogspot.com

Advertisements

5 பதில்கள் to “தமிழ்மொழியில் ஒற்றுப் பிழைகள்!”

 1. Mr WordPress Says:

  சொல்லச்சு நிறுவனத்தில் முன்மாதிரித் தொகுப்புரை!

 2. சீனா ( Cheena ) Says:

  ஓர் ஒரு பயன்பாடு அழகாக விளக்கப் பட்டிருக்கிறது

  நல்வாழ்த்துகள் தியாகராஜன்

 3. tyagas Says:

  மிக்க நன்றி சீனா அவர்களே

 4. தினேஷ் Says:

  நல்லதொரு தகவல். இதை ஏன் நீங்கள் திரட்டிகளில் சமர்பிக்கக்கூடாது.

  வாழ்த்துக்கள்.

 5. Senapathy Thirugnanasambandam Says:

  முதலில், ஒரு நல்ல வலைப்பூவைக் குடுத்தமைக்கு நன்றி. இது போன்ற கட்டுரைகள் மிகவும் வரவேற்கத்தக்கது.

  எப்படி என்பதற்கான விடையை நன்றாகக் குடுத்துள்ளீர்கள்.

  இதனுடன் “ஏன்” என்ற கேள்விக்கும் விடையளித்தீர்களானால் மிகவும் நல்லது.

  (எ-க.) ஏன் ஓரு இட்டலி என்றெழதக்கூடாது ?

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  மாற்று )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s


%d bloggers like this: